/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிலக்கடலையில் விதை உற்பத்தி: விவசாயிகளுக்கு பயிற்சி துவக்கம்
/
நிலக்கடலையில் விதை உற்பத்தி: விவசாயிகளுக்கு பயிற்சி துவக்கம்
நிலக்கடலையில் விதை உற்பத்தி: விவசாயிகளுக்கு பயிற்சி துவக்கம்
நிலக்கடலையில் விதை உற்பத்தி: விவசாயிகளுக்கு பயிற்சி துவக்கம்
ADDED : ஆக 07, 2025 02:30 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், விதை உற்பத்தி குறித்த இருநாள் பயிற்சி நேற்று துவங்கியது.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நிலக்கடலையில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி நேற்று துவங்கியது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார்.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் லட்சுமிகாந்தன் சிறப்புரையாற்றினார்.
துணை இயக்குனர் அமிர்தராஜ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும் வேளாண் துறை திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
உதவி இயக்குனர் வெங்கடேசன் தொழில்நுட்பங்கள், விதை உற்பத்தி, விதை நேர்த்தி, புதிய ரகங்கள் சாகுபடி குறித்து பேசினார்.
பேராசிரியர் காயத்ரி உயிர் உரங்கள், அங்கக வேளாண்மை குறித்து பேசினார்.
முன்னோடி விவசாயி குமரகுரு நிலக்கடலை சாகுபடியில் தனது அனுபவம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். வேளாண் விஞ்ஞானிகள் கண்ணன், சுகுமாரன், கலைச்செல்வி, வேளாண் அலுவலர் சுகன்யா ஆகியோர் தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தனர்.
மாவட்டத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.