UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:27 PM
பண்ருட்டி: வழி பிரச்னை காரணமாக கோஷ்டி மோதல் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். 6 பேரை தேடிவருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடராஜன் மகன் ரூபசந்திரன்,31; ஜீவரத்தினம் மகன் ஜெயபிரகாஷ்,50; இவர்களுக்குள் வழி பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 30 ம் தேதி மாலை ரூபசந்திரன், ஜெயபிரகாஷிடம், ஏன் என் நிலத்தின் வழியாக வந்தாய் என கேட்டார். அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
இதுகுறித்து ரூபசந்திரன் மற்றும் ஜெயபிரகாஷ் தம்பி ஜெயபிரசாத் ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில் பண்ருட்டி போலீசார் இருதரப்பிலும் தலா 4 பேர் மீது வழக்கு பதிந்து, ஜெயபிரகாஷ் தரப்பில் 17 வயது சிறுவனும், ரூபச்சந்திரன் தரப்பில் அவரது தந்தை நடராஜன்,55; ஆகியோரை கைது செய்தனர். மேலும், 6 பேரை தேடிவருகின்றனர்.
