
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் செம்மண்டலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 47; இவர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மாதம் 27ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
அவரது மனைவி காமாட்சி கொடுத்த புகாரின்பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.