ADDED : அக் 22, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: காவலர் வீர வணக்க நாளையொட்டி, கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள நினைவு துாணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
கடலுார் எஸ்.பி.,அலுவலக வளாகத்தில் உள்ள நினைவு துாணுக்கு எஸ்.பி., ராஜாராம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கூடுதல் எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,க்கள் சவுமியா, நாகாரஜன், சண்முகவேலன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்விநாயகம், முருகேசன், அமுதா, ஊர்க்காவல் படை துணை வட்டார தளபதி கலாவதி, மாவட்ட உதவி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

