நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் லயன்ஸ் கிளப் சார்பில், போலீஸ் நிலையத்தில் 'காவலர் தினம்' கொண்டாடப்பட்டது.
பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் கிளப் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கி, சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசாருக்கு இனிப்பு வழங்கி, கவுரவித்தார்.
சாசன தலைவர் ஞானப்பிரகாசம், வட்டாரத் தலைவர் மேழிச்செல்வன், துணை தலைவர்கள் அழகுவேலன், வெங்கடேஸ்வரன், சங்க தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், நீலமேகம், சுவாமிநாதன், போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார்.