/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உயர்கல்விக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
/
உயர்கல்விக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
உயர்கல்விக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
உயர்கல்விக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
ADDED : ஏப் 18, 2025 04:57 AM
கடலுார்: கடலுாரில் பிளஸ் ௨ மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். பின், அவர் பேசுகையில், 'கடலுார் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பிளஸ் ௨ பயிலும் 845 அரசு பள்ளி மாணவர்களை தமிழகத்தில் உள்ள முதன்மை பொறியியல் கல்லுாரிகளில் சேர்க்கை செய்வதற்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அளவில் நடக்கக் கூடிய உயர்கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு கூட்டத்திற்கு அரசு பள்ளிகளில் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மாணவர்களும் கட்டாயம் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர் பொறியியல் கல்லுாரி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்' என்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், வடலுார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பழனி, தலைமையாசிரியர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர், பயிற்றுநர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

