sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கொலை வழக்கில் கைதான  2 பேருக்கு 'குண்டாஸ்'  

/

 கொலை வழக்கில் கைதான  2 பேருக்கு 'குண்டாஸ்'  

 கொலை வழக்கில் கைதான  2 பேருக்கு 'குண்டாஸ்'  

 கொலை வழக்கில் கைதான  2 பேருக்கு 'குண்டாஸ்'  


ADDED : பிப் 25, 2026 06:41 AM

Google News

ADDED : பிப் 25, 2026 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலுார், முதுநகர் அடுத்த சோனாஞ்சாவடியை சேர்ந்தவர் குமார் (எ) பூமிநாதன்,50; இவரை, கடந்த 30ம் தேதி மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்தனர்.

இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, வைரங்குப்பத்தை சேர்ந்த அப்பாவு மகன் சுதாகர்,21; வேலு மகன் முகேஷ்,21; ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குமார் தீப்பெட்டி கேட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை, கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டனர். உடன், இருவரையும் போலீசார் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். சுதாகர் மீது முதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளன.

இருவரின் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையையேற்று, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை இருவரிடம் போலீசார் நேற்று வழங்கி கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us