ADDED : பிப் 26, 2026 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டியில், அரசு பள்ளி அருகில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற இருவரையும் போலீசார் மடக்கி, பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும், கண்டரக்கோட்டை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த முனியன் மகன் அன்பு,20; பண்ருட்டி லட்சுமிபதிநகர் சேர்ந்த மணி மகன் ஸ்டாலின்,28; என கண்டறிய ப்பட்டது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

