/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காவு வாங்கும் குன்னத்தேரி: பொதுமக்கள் திக்... திக்... எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு
/
காவு வாங்கும் குன்னத்தேரி: பொதுமக்கள் திக்... திக்... எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு
காவு வாங்கும் குன்னத்தேரி: பொதுமக்கள் திக்... திக்... எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு
காவு வாங்கும் குன்னத்தேரி: பொதுமக்கள் திக்... திக்... எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 06, 2025 09:10 AM

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீ வக்காரமாரியில் குன்னத்தேரி உள்ளது. இந்த ஏரியில் ஆண்டுதோறும் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்படுகிறது. விவசாயிகள் வண்டல் மண்ணை பயன்படுத்தி நிலங்களை சரி செய்து கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது.
ஆனால், அதற்கு மாறாக விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண் விற்பனை செய்யும் மணல் மாபியாக்கள் அதிகாரிகளை பலமாக கவனித்து வண்டல் மண் அள்ளுவதற்கான அனுமதி பெற்று விடுகின்றனர்.
மண் வாங்கும் நபர்கள் எந்த இடத்தில் மண் நன்றாக உள்ளது என முன்கூட்டியே தெரிந்து கொண்டு மண் அள்ளுகின்றனர். 7 அடி முதல் 12 அடி வரை ஆழமாக மண் அள்ளிவிட்டு பள்ளங்களை சரி செய்யாமல் அப்படியே விட்டு சென்று விடுகின்றனர். இதனால் ஏரியில் ஆங்காங்கே மரண பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதனை அறியாமல் ஏரியில் மீன் பிடிக்கவும், குளிக்கவும் செல்லும் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளங்களில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலையில், ஏரியில் துார் வாருவதாக கூறி மண் அள்ள ஆரம்பித்த பின்னரே உயிரிழப்பு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 2 பள்ளி மாணவர்கள் பள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர். ஏரியில் பள்ளங்களை சமன் செய்து ஒரு பக்கத்தில் இருந்து மண் அள்ளுவது குறித்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை உள்ளிட்ட எந்த துறை அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு உத்தரவு வழங்குவது கிடையாது.
இப்பகுதி மக்கள் பள்ளங்களை சரி செய்யக் கோரி கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் பள்ளங்களை சரி செய்யவும், ஏரியின் கரைகளில் ஆழமான பகுதி என, எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.