/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுந்தரமூர்த்தி சுவாமிக்கு குருபூஜை விழா
/
சுந்தரமூர்த்தி சுவாமிக்கு குருபூஜை விழா
ADDED : ஆக 02, 2025 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சுந்தரமூர்த்தி சுவாமி குருபூஜை விழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவில் சன்னதியில் உள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குருபூஜை விழாவையொட்டி நேற்று காலை சுவாதி நடசத்திரத்தில், சுந்தரமூர்த்தி சுவாமி மற்றும் 63 நாயன்மர்களுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மற்றும் 63 நாயன்மார்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மாலை வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.