/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்கா பதுக்கல் 3 கடைகளுக்கு 'சீல்'
/
குட்கா பதுக்கல் 3 கடைகளுக்கு 'சீல்'
ADDED : பிப் 21, 2024 07:30 AM
கடலுார் : கடலுாரில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 3 மளிகை கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்'வைத்தனர்.
கடலுார், வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 47; மளிகை கடை வைத்துள்ளார். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக அவர் மீது புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
துாத்துக்குடி, ஆத்துாரைச் சேர்ந்தவர் மதியழகன் மகன் விக்னேஷ், 28; இவர், கடலுார் சிப்காட்டில் மளிகை கடை வைத்துள்ளார். இவர், புகையிலை பொருட்களை பதுக்கி வைத்ததாக முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார், பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார் மனைவி லட்சுமி, 36; இவர் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தாக, அவர் மீது துறைமுகம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த மூன்று மளிகை கடைகளுக்கும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் நேற்று 'சீல்' வைத்தனர்.

