ADDED : ஜன 06, 2025 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூரில் பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் கோபிக்குமார் தலைமையில் போலீசார் நேற்று மிராளூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பெட்டிக்கடையில் ஹான்ஸ், குட்கா பாக்கெட் பதுக்கி விற்பனை செய்த வாகீசன், 55; அவரது மனைவி பழனியம்மாள், 46; இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.