ADDED : ஜன 24, 2025 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: பெட்டிக்கடைகளில் குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, கொடுக்கூர் பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்த சுப்ரமணி மகன் வினோத்குமார், 31, என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், பஸ் நிலைய பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்த சின்னவடவாடி சிவக்குமார், 37, என்பவரை போலீசார் கைது செய்தனர்.