ADDED : அக் 25, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். புவனகிரி அடுத்த வடக்குத்திட்டை பெரியத்தெருவில் உள்ள பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து அதேப்பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர் ராமதாஸ், 58; என்பவரை கைது செய்தனர்.