ADDED : டிச 22, 2024 09:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று கட்டியங்குப்பம் அரசுப்பள்ளி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சாக்குப்பையுடன் சென்ற நபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தது. விற்பனையாக அவர் எடுத்து சென்றதாக தெரிவித்தார்.
அதையடுத்து, குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குபதிந்து, கிருஷ்ணங்குப்பத்தை சேர்ந்த அப்போலின், 36; என்ற அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடமிருந்து 16 கிலோ எடையுள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.