நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பொன்னேரி புறவழிச்சாலையில் ரோந்து சென்றனர்.
அப்போது, கோ.மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்மணியன், 38, என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, சுப்ரமணியனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.