நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்,: குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாச்சியார்பேட்டை மெயின்ரோட்டில் ராமாபுரத்தைச் சேர்ந்த சேகர், 50; என்பவரின் பெட்டிக் கடையில் சோதனை நடத்திய போது, குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 7 கிலோ 800 கிராம் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.