ADDED : ஆக 15, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அருகே குட்கா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம் பாக்கம் பெண்ணையாற்றின் அருகே உள்ள செக்போஸ்ட்டில் எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகபடும்படி பைக்கில் வந்தவரை நிறுத்தினர்
அவர் நிற்காமல் சென்றதால் துரத்தி பிடித்து சோதனை செய்தனர். பைக்கில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 300 குட்கா பாக்கெட்டுகள் இருந்தன.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து விழுப்புரம் மாவட்டம், கலிஞ்சிக்குப்பம் பாலு, 48; என்பவரை கைது செய்தனர்.

