ADDED : நவ 16, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி போலீசார் கீரப்பாளையத்தில், வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக, வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அவர் எடுத்து வந்த பையில், 42 பாக்கெட்டுகளில், புகையிலை பொருட்கள் இருந்தன.
போலீசார் விசாரைணயில், அவர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விமல், 42; என தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

