ADDED : அக் 30, 2026 06:57 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: குட்கா பொருட்கள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் இன்று (அக்.,30) ரோந்து சென்றனர். அப்போது, தொட்டிக்குப்பத்தில், அதேபகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் வடிவேல்,26; தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, வடிவேலுவை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
