/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செந்தில் மெட்ரிக் பள்ளியில் சிலம்பாட்டப் போட்டிகள்
/
செந்தில் மெட்ரிக் பள்ளியில் சிலம்பாட்டப் போட்டிகள்
செந்தில் மெட்ரிக் பள்ளியில் சிலம்பாட்டப் போட்டிகள்
செந்தில் மெட்ரிக் பள்ளியில் சிலம்பாட்டப் போட்டிகள்
ADDED : ஜூலை 10, 2025 12:30 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடந்தது.
கடலுார் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கமலேஷ்வரன் வரவேற்றார். மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ரோட்டரி சங்கம் உதவி ஆளுனர் அசோக்குமார், தலைவர் அன்புக்குமரன் போட்டியை துவக்கி வைத்தனர்.
அதில், மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பண்ருட்டி நாகம் பதினாறு சிலம்பாட்டக் கழக ஆலோசகர் மதிவாணன், விழுப்புரம் மாவட்ட தலைவர் குணசேகரன், திருப்பூர் செயலாளர் சுமதி சுப்ரமணியம் பரிசு வழங்கினர். மாவட்ட சங்க செயலாளர் ரகுநாத் நன்றி கூறினார்.