/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஹேண்ட்பால் போட்டி பரிசளிப்பு விழா
/
ஹேண்ட்பால் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : அக் 14, 2025 07:27 AM

கடலுார்; கடலுாரில் ஹேண்ட்பால் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டி நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் போட்டியை துவக்கி வைத்தார்.
மாவட்ட ேஹண்ட்பால் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 9 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி போட்டியை இந்திய அணியின் கூடைபந்து வீரர் தங்கதுரை துவக்கி வைத்தார்.
திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம், கடலுார் முதுநகர் காமாட்சி சண்முகம் மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம், அரியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம், சிதம்பரம் ஏ.ஆர்.ஜி., அகாடமி நான்காமிடம் பிடித்தன.
பரிசளிப்பு விழாவில், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன், எஸ்.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் சுதாகர், ஓய்வு பெற்ற இந்திய அணியின் ேஹண்ட்பால் தலைமை பயிற்சியாளர் கார்த்திகேயன், மாவட்ட ேஹண்ட்பால் கழக செயலாளர் அசோகன், துணைத் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர்.
விழாவில், நிர்வாகிகள் கவியரசன், செங்குட்டுவன் உட்பட பலர் பங்கேற்றனர்.