
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் கைத்தறி துறை சார்பில் 11வது தேசிய கைத்தறி தின விழா நடந்தது.
கைத்தறி துறை உதவி இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். நெசவாளர் சேவை மைய கண்காணிப்பாளர் ராகுல் வரவேற்றார். சென்னை நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் வரதராஜ் பேசினார்.
விழாவில், சென்னை நெசவாளர் சேவை மையம் சார்பில் உற்பத்தி செய்யப்பட்ட பல ரக சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
தேசிய கைத்தறி வளர்ச்சி கழக உதவி மேலாளர் சுப்பிரமணி, இந்திய சில்க்மார்க் சசிதரன், ஸ்ரீதரன் கருத்துரை ஆற்றினர். நெசவாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.