/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடர்மழையில் கைத்தறி நெசவாளர்கள் கடும் அவதி
/
தொடர்மழையில் கைத்தறி நெசவாளர்கள் கடும் அவதி
ADDED : டிச 04, 2024 09:40 AM

நடுவீரப்பட்டு,டிச.4-கடலுார் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவு செய்யும் நெசவாளர்கள் தொடர்மழையால் கடும் அவதியடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி,மீனாட்சிப்பேட்டை, வண்டிப்பாளையம்,கே.என்.பேட்டை,காராமணிக்குப்பம்,முத்துகிருஷ்ணாபுரம்,நடுவீரப்பட்டு,சி.என்.பாளையத்தில் கைத்தறி நெசவாளர்கள் அதிகளவு கைத்தறி நெசவு செய்து வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.இதனால் கைத்தறி நெசவாளர்கள் நெசவு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.மேலும் கைத்தறியின் உபதொழிலான பாவு முனைதல்,நுால் சுற்றுதல்,பாவுபட்டறை தொழிலாளர்களும் தொழிலின்றி உள்ளனர்.
பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.இதனால் சி.என்.பாளையம்,நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள தறிக்குழியில் மழைநீர் ஊற்றெடுத்து தண்ணீர் தேங்கி உள்ளது.இந்த மழைநீர் ஊற்று குறைவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு மேலாகும்.இதனால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கைத்தறி மற்றும் பாவுபட்டறை தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தின் காரணமாக கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்பட்டது.ஆனால் இந்த கூலி உயர்வான ரகத்தினை உற்பத்தி செய்ய முடியாமல் தொடர்மழையில் நெசவாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஆகையால் தமிழக அரசு நெசவாளர்களுக்கு மழைநிவாரணம் வழங்கிட நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.