ADDED : ஜூலை 23, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ரத்தனா நகைக்கடை உரிமையாளர் சுகுமார் சென்றபோது சாலையில் 30 கிராம் தங்க செயின் கீழே கிடந்ததை எடுத்துள்ளார்.
செயினை கடலுார் எஸ்.பி., ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தார். நேர்மை யுடன் நகையை ஒப்படைத்த நகைக்கடை உரிமையாளரை கடலுார் எஸ்.பி., பாராட்டினார்.
செயினை தொலைத்தவர்கள் கடலுார் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னாவை அணுகி சரியான அடையாளம் கூறி பெற்று செல்லலாம் என எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உதவி ஆய்வாளர் செல் : 99414 08190.