
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வளையமாதேவி சாலையில் ரோந்து சென்றனர்.
அந்த பகுதி பெட்டிக்கடையில் ஹான்ஸ் பாக்கெட் பதுக்கி விற்பனை செய்வதை கண்டறிந்தனர்.
விசாரணையில், அவர் கீழ்வளையமாதேவி உடையார்குளத் தெருவை சேர்ந்த அமாவாசை மகன் மணிகண்டன், 48; என தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும், கடையிலிருந்து 2 கிலோ எடையுள்ள, 132 ஹான்ஸ் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

