ADDED : டிச 08, 2025 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, தொளார் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.
அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட, 330 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, கடை உரிமையாளர் இறையூர் ரவி மகன் சந்துரு, 24, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

