UPDATED : நவ 04, 2026 02:23 PM
ADDED : நவ 04, 2026 02:19 PM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரியில் அப்துல்ரவூப்,42; நடத்தி வரும் பெட்டி கடையில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பதாக தகவல் வந்தது.
அதன்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார், கடையில் நடத்திய சோதனையில், விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 10 பாக்கெட் ஹான்ஸ், கூல் லீப் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து அப்துல்ரவூப்பை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
