UPDATED : நவ 04, 2026 02:23 PM
ADDED : நவ 04, 2026 02:19 PM

அ நிறம் | அளவு
திட்டக்குடி: விலைவாசி உயர்வை கண்டித்து திட்டக்குடியில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிடப்பட்டது.
