ADDED : செப் 23, 2026 04:57 AM
அ நிறம் | அளவு
நெய்வேலி: ஹான்ஸ் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி, வட்டம் - 21, நாவலர் தெருவில் உள்ள வீடு ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா விற்பதாக புகார் வந்தது.
அதன்பேரில் தெர்மல் சப் இன்ஸ்பெக்டர் , ஜெரினா மற்றும் போலீசார் நேற்று விரைந்து சென்று, ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்றுக் கொண்டிருந்த, கிருஷ்ணகிரி மாவட்டம், வேலம்பட்டியை சேர்ந்த ராமசாமி, 40, என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 2.7 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
