ADDED : செப் 23, 2026 04:57 AM

அ நிறம் | அளவு
நெய்வேலி: வாலிபரை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி அடுத்த இந்திரா நகர், பி2 - மாற்று குடியிருப்பை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் அன்பு செல்வன்,23; இவர் நேற்று முன்தினம் வட்டம் - 21ல் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அங்கு குடிபோதையில் நின்றிருந்த சக்திவேல் மகன் பல்லு (எ) பிரசாத், 23, என்பவர் அன்பு செல்வனை முன்விரோதம் காரணமாக தாக்கினார்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப் பதிந்து பல்லு பிரசாத்தை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
