தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : செப் 23, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 04:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் பிரிவு கடலோர பாதுகாப்புக்குழுமம் சார்பில் தமிழக மீனவ இளைஞர்களுக்கான 5-வது திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா எஸ்.பி., அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

பயிற்சியை துவக்கி வைத்த எஸ்.பி., விவேகானந்த சுக்லா பேசியதாவது;

மீனவ இளைஞர்களின் திறனை மேம்படுத்த உதவும் 3 மாத கால இலவச அடிப்படை பயிற்சி ஆகும். இப்பயிற்சியில் சேர்ந்து இளைஞர்கள் மேலும் திறன்களை வளர்த்துக் கொள் ள வேண்டும். சீருடைத்துறை, மற்ற துறை களில் இருந்து வேறுபட்டது.

உடற்திறன், திடமான மனநிலை இவை இரண்டும் இருந்தால மட்டுமே சீருடை பணிக்கு வர முடியும் என்றார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு கடற்படை என்.சி.சி., லெப்டினன்ட் கமாண்டர் டேவிட் தாமஸ், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜவ்வாது உசேன், கடலோர பாதுகாப்பு குழுமம் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் பயிற்சி யாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us