தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுார் கடற்கரைக்கு வந்த 'ஹோவர் கிராப்ட்' கப்பல்கள்

கடலுார் கடற்கரைக்கு வந்த 'ஹோவர் கிராப்ட்' கப்பல்கள்

கடலுார் கடற்கரைக்கு வந்த 'ஹோவர் கிராப்ட்' கப்பல்கள்


UPDATED : அக் 17, 2026 10:29 PM

ADDED : அக் 17, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 10:29 PM ADDED : அக் 17, 2026 04:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சிற்கு வந்த இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ''ஹோவர் கிராப்ட்' கப்பல்களை பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டனர்.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 அதிநவீன 'ேஹாவர் கிராப்ட்' படகுகள் காரைக்காலில் இருந்து கடலுார் சில்வர் பீச்சிற்கு காலை வந்து சேர்ந்தன. கடலில் இருந்து பலத்த காற்று மற்றும் சத்தத்துடன் கடல் பரப்பில் இருந்து கடற்கரை மணலில் சீறிப்பாய்ந்து, நிலப்பகுதியில் பயணித்து நிறுத்தி வைக்கப்பட்டன. இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கப்பல் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் விளக்கிக் கூறினர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு சென்னை வழியாக பயணித்து மேற்கு வங்க மாநிலம் ஹால்டியா துறைமுகம் ஹால்டியா நோக்கி புறப்பட்டது.

கோவாவில் தயாரிக்கப்பட்ட 'ஹோவர் கிராப்ட்' படகுகள் அங்கிருந்து புறப்பட்டு ஹால்டியா துறைமுகம் நோக்கிச் செல்கின்றன. ஹால்டியாவுக்குச் செல்லும் வழியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட கடற்கரை வழியாக பயணித்துச் செல்கின்றன. அந்த வகையில் கடலுார் சில்வர் பீச்சிற்கு கப்பல்கள் வந்தன.

இந்த கப்பல் அதிக ஆழம் இல்லாத கடல் பகுதிகளிலும், தரைப் பகுதிகளிலும் தங்கு தடையின்றி அதிவேகமாகச் செல்லும் திறன் கொண்டவை. கடற்கரை பகுதிகளில் கள்ளக் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்களை கண்காணிக்கவும், பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்கவும் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us