/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அறிவையும், ஒழுக்கத்தையும் கற்று கொடுக்கும் ஹயகிரிவர் பள்ளி, டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி
/
அறிவையும், ஒழுக்கத்தையும் கற்று கொடுக்கும் ஹயகிரிவர் பள்ளி, டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி
அறிவையும், ஒழுக்கத்தையும் கற்று கொடுக்கும் ஹயகிரிவர் பள்ளி, டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி
அறிவையும், ஒழுக்கத்தையும் கற்று கொடுக்கும் ஹயகிரிவர் பள்ளி, டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி
ADDED : மே 21, 2025 11:43 PM

கடலுார்: புதுச்சேரி கடலுார் இ.சி.ஆர்., சாலையில் புதுச்சேரி மாநிலம் முள்ளோடை மதிகிருஷ்ணாபுரம் பகுதியில் டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி மற்றும் ஹயகிரிவர் பப்ளிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அந்நிறுவனத்தின் கல்வி சேவை குறித்து தாளாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ரங்கமணி கூறுகையில், பெருமைக்காக தேடிக்கொள்வதல்ல, பெற்றதைக் கொண்டு பெருமை தேடிக் கொள்வதுதான் கல்வி என்ற சிறப்பான உயரிய கருத்தை போதிக்கும் விதமாக எமது கல்லுாரியில் கற்றல் செயல்பாடுகள் சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு ஆசிரிய பயிற்சி நிறுவனமாக தொடங்கப்பட்டு பின் மத்திய (என்.சி.டி.இ.,) மற்றும் மாநில அரசின் அங்கீகாரத்துடன் புதுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2007 ஆம் ஆண்டு முதல் கல்வியியல் கல்லூரி ஆக (பி.எட்.,) சிறப்பான முறையில் கடந்த 18 ஆண்டுகளாக கல்வி சேவை அளிக்கிறது. கல்வி கடவுளாகிய ஹயகிரிவர் ஆசியுடன் துவக்கப்பட்டது, எங்கள் ஹயகிரிவர் பப்ளிக் பள்ளி. 2009ல் ஆரம்ப பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, தற்போது மேல்நிலைப் பள்ளியாக சிறப்பான முறையில் செயலாக்கம் பெற்றுள்ளது. எமது பள்ளியில் பதினோராம் வகுப்பில் 6 பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. சிறந்த படைப்பாற்றல் மிகுந்த மாணவர்களை உருவாக்குவது எங்களது குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம்.
எங்கள் கல்வி நிறுவனம் பாகூர்- கடலுார் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு வரப்பிரசாதம். மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை இப்பகுதி கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு, ஆங்கில வழி கல்வி கனவை நனவாக்கும் உயரிய நோக்கத்தில் கடந்த 16 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. காற்றோட்டமான வகுப்பறைகள், விளையாட்டுதிடல், உபகரணங்கள், கல்வி இணை செயல்பாடுகளான கராத்தே, யோகா, சதுரங்கம், பரதநாட்டியம், மேற்கத்தியநடனம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்றங்கள், அறிவியல் சார்திறன்கள் செயல்படுத்தப்படுகிறது. பாதுகாப்பான வாகன வசதி, வாசிக்கும் திறனை மேம்படுத்த சிறப்பான நூலக வசதி, பயிற்சி மற்றும் அனுபவம் மிகுந்த ஆசிரியர்களை கொண்டு இணைய வழி கல்வி மூலமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.
எமது ஹயகிரிவர் பள்ளி பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த கல்வி ஆண்டு 2024--25 பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் பள்ளிக்கு பெருமை சேர்த்து 90 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று எங்களது மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். எங்களிடம் பயின்ற மாணவர்கள் மத்திய, மாநில அரசுத்துறையில் உயரிய பதவியில் பணியாற்றுவது எங்களுக்கு பெருமை என்றார்.