/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார்கள் நேருக்கு நேர் மோதல் : டிரைவர் பலி ; 7 பேர் காயம்
/
கார்கள் நேருக்கு நேர் மோதல் : டிரைவர் பலி ; 7 பேர் காயம்
கார்கள் நேருக்கு நேர் மோதல் : டிரைவர் பலி ; 7 பேர் காயம்
கார்கள் நேருக்கு நேர் மோதல் : டிரைவர் பலி ; 7 பேர் காயம்
ADDED : மே 17, 2025 11:51 PM
விருத்தாசலம்: கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.
விருத்தாசலத்தில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி நேற்று முன்தினம் இரவு சான்ட்ரோ சிங் கார் சென்று கொண்டிருந்தது. மங்கலம்பேட்டை புறவழிச்சாலை பில்லுார் அருகே, உளுந்துார்பேட்டையில் இருந்து விருத்தாசலம் நோக்கி ஹோண்டா அமேஸ் காருடன் நேருக்கு நேர் மோதியது.
இதில், சான்ட்ரோ சிங் கார் ஓட்டி வந்த உரிமையாளர் மயிலாடுதுறை அடுத்த நலத்தக்கொடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம், 33, சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் பயணித்த ஸ்ரீமுஷ்ணம் தமிழரசன், 25; காட்டுமன்னார்கோவில் அடுத்த வெங்கடேசபுரம் சிவா, 24; மயிலாடுதுறை சதீஷ், 26; விருத்தாசலம் பழமலைநாதர் நகர் ஆஜாஷெரிப், 29; பிரசாந்த், 35; வயலுார் பிரபு, 30; ஏ.பி., நகர் ராஜேஷ், 30, ஆகியோர் காயமடைந்தனர். அனைவரும், சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.