தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சுகாதார நிலையம் பாழாகி வரும் அவலம்

சுகாதார நிலையம் பாழாகி வரும் அவலம்

சுகாதார நிலையம் பாழாகி வரும் அவலம்


UPDATED : நவ 07, 2026 02:47 PM

ADDED : நவ 07, 2026 02:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 02:47 PM ADDED : நவ 07, 2026 02:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: திருமலை அகரத்தில் பாழாகி வரும் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சி, திருமலை அகரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதன் மூலம் திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், அருகேரி உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி சிகிச்சை பெற்று வந்தனர். நாளடைவில் பராமரிப்பின்றி சுகாதார நிலையம் முட்புதர்கள் மண்டி, பூட்டப்பட்டது.

இதனால் இப்பகுதி மக்கள் பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி அரசு மருத்துவமனைகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் கர்ப்பிணிகள், பெண்கள், முதியோர், சிறுவர்கள் சிகிச்சை பெற மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே, திருமலை அகரத்தில் பாழாகி வரும் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us