/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடும் பனிப்பொழிவால் அறுவடை பணிகள் பாதிப்பு
/
கடும் பனிப்பொழிவால் அறுவடை பணிகள் பாதிப்பு
ADDED : ஜன 29, 2025 06:52 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு சுற்றுவட்டாரத்தில் காலை 11.00 மணி வரை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் அறுவடை பணிகள் கடுமையாக பாதித்தது.
சேத்தியாத்தோப்பு சுற்றியுள்ள எறும்பூர், வீரமுடையாநத்தம், பெரியநற்குணம், அகரஆலம்பாடி, விளக்கப்பாடி, சாத்தப்பாடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறுவடை பணிகள் துவங்கி இயந்திரம் கொண்டு சம்பா நெல் அறுவடை நடந்து வருகிறது.
நேற்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் நெல் தாள்கள் ஈரம் அதிகரித்தது. பணிப்பொழிவு காலை 11.00 மணிவரை நீடித்து படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து 12.00 மணிக்கு பிறகு வயல்களில் அறுவடை இயந்திரத்தை இறக்க பணிகளை துவங்கினர். அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை களத்தில் காய வைப்பதிலும் பணிகள் பாதிப்பு ஏற்பட்டது. கடும் பனிப்பொழிவினால் சாலையில் சென்ற வாகனங்கள் எதிரே செல்லும் வாகனங்களுக்கு எச்சரிக்கும் வண்ணம் முகப்பு விளக்குகளை போட்டபடி சென்றனர்.
பனிப்பொழிவால் வயல்களுக்கு செல்லும் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

