ADDED : டிச 05, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக நவ., 30 மற்றும் டிச., 1ம் தேதி ஆகிய இரு நாட்கள் கடலுாரில் கனமழை பெய்தது. அடுத்தடுத்த நாட்களிலும் மிதமான மழை பெய்தது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர பகுதிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின. இந்நிலையில், நேற்று காலை கடலுார் சுற்றுவட்டாரப்பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வழக்கமாக தமிழ் மாதங்களான கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பனிப்பொழிவு இருக்கும். மழை காரணமாக ஒரு வாரமாக காணப்படாத பனிப்பொழிவு, நேற்று காலை மீண்டும் தென்பட்டது.