/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
/
கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 15, 2024 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் காலை வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.
கடலுார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பனிப்பொழி அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில், நேற்று காலை 8:00 மணி வரை எதிரில் இருப்பவர்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு காணப் பட்டது.
மேலும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகைமூட்டமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந் தனர். இதனால், வாகன ஓட்டிகள், விபத்து ஏற்படுவதை தடுக்க வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.