ADDED : ஜன 26, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி : நெய்வேலியில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் டவுன்ஷிப் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிநடந்தது.
நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் முன்னிலை வகித்தார்.
வாகன ஓட்டிகளிடம், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விளக்கியதுடன் அவர்களுக்கு புதிய ஹெல்மெட் மட்டுமின்றி இனிப்பு வழங்கப்பட்டது.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை வைத்ததுடன், எமன் மற்றும் விபத்தில் சிக்கும் குடும்பத்தினர் போன்ற வேடமணிந்த நாடக கலைஞர்களை கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.