தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஹெல்மெட் விழிப்புணர்வு விருத்தாசலத்தில் ஊர்வலம்

ஹெல்மெட் விழிப்புணர்வு விருத்தாசலத்தில் ஊர்வலம்

ஹெல்மெட் விழிப்புணர்வு விருத்தாசலத்தில் ஊர்வலம்


ADDED : ஜன 23, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 06:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார்.

விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி வரவேற்றார்.

ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

கடலுார் சாலையில் உள்ள கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து பாலக்கரை, நான்கு மாட வீதிகள், ஜங்ஷன் சாலை, ஆலடி ரோடு வரை ஊர்வலம் நடந்தது.

இதில், சப் இன்ஸ்பெக்டர் காந்தி உட்பட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் ஊழியர்கள், டூவீலர் ேஷாரூம் ஊழியர்கள் ெஹல்மெட் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

அதில், சாலை பாதுகாப்பு, அவசர காலங்களில் வாகனங்களில் தீயை கட்டுப்படுத்துவது, ெஹல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது. அலுவலக கண்காணிப்பாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us