ADDED : மே 02, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்,: பெண்ணாடத்தில் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் ெஹல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். புதிய பஸ் நிலையம் முதல் சுமை தாங்கி பஸ் நிறுத்தம் வரை சென்ற ஊர்வலத்தில் ெஹல்மெட் அணிவதன் நன்மைகள் குறித்து கோஷமிட்டு சென்றனர்.
வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ெஹல்மெட் வழங்கப்பட்டது. நகர வர்த்த சங்க தலைவர் மோகன், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

