ADDED : ஆக 04, 2025 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் போக்குவரத்து பிரிவு போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மஞ்சக்குப்பத்தில் நடந்தது.
போக்குவரத்து போலீஸ் பிரிவு இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமை தாங்கினார்.
டி.எஸ்.பி., ரூபன்குமார் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். அப்போது ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களிடம், இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து பிரிவு போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.