/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
/
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
ADDED : பிப் 01, 2024 06:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு பூவாணிக்குப்பத்தில், மாயவன், பஞ்சவர்ணம் ஆகியோரது வீடுகள் மின் கசிவால் எரிந்து சேதமானது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வி.சி., கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. கட்சியின் கடலூர் மைய மாவட்ட செயலாளர் நீதிவள்ளல், வீட்டு உபயோக பொருட்கள், மாணவர்களுக்கு ஆடைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். மாநில துணை செயலாளர் முரளி, ஒன்றிய கவுன்சிலர் சுந்தர், பூவை ஸ்ரீதர், கோபு, ஞான பிரகாஷ், தில்லை மகாலட்சுமி, அரவிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.