/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விழிப்புணர்வு கருத்தரங்கு ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்பு
/
விழிப்புணர்வு கருத்தரங்கு ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்பு
விழிப்புணர்வு கருத்தரங்கு ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்பு
விழிப்புணர்வு கருத்தரங்கு ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்பு
ADDED : மார் 24, 2025 05:52 AM

கடலுார், : பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
பாலின சமநிலை, பாலின சமத்துவம், பெண்களுக்கு உரிய அதிகாரம் அளித்தலை உறுதி செய்யும் நிர்வாகக்குழுவின் வழிகாட்டுதல்படி கடலுார் அடுத்த குமாரபுரம் கிருஷ்ணசாமி கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்ராதேவி வரவேற்றார்.
முதன்மை விருந்தினர்கள் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஆஷா மற்றும் மாவட்ட நீதித்துறையின் (பொறுப்பு) நீதிபதி மாலா ஆகியோர் கருத்தரங்கை துவக்கி வைத்து, பாலின சமத்துவத்தின் அவசியம், பெண்களுக்கு உரிய அதிகாரம் அளித்தல், பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டம் குறித்து பேசினர்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., விஜயக்குமார் வாழ்த்திப் பேசினர். கருத்தரங்கில் மாவட்ட நீதிபதிகள் ஆனந்தன், உத்தமராஜ், பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஐகோர்ட் வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, டாக்டர் செங்கமலத்தாயார், மாநகர கமிஷனர் அனு, போக்சோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி லட்சுமி ரமேஷ் ஆகியோர் அடுத்தடுத்த அமர்வுகளில் பேசினர்.
மாணவிகளுக்கு 'நிகரென கொள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நாடகம் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. பயிற்சி நீதிபதிகள் ஸ்ரீவர்ஷா, கௌரி, மார்ஷல் ஏசுவடியான், புவனேஷ்குமார் கருத்தரங்கை தொகுத்து வழங்கினர்.
மாவட்ட முதன்மை குற்ற வியல் நீதித்துறை நடுவர் நாகராஜன் நன்றி கூறினார்.