/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உயர்மட்ட பாலம் கட்டும் பணி: கலெக்டர் துவக்கி வைப்பு
/
உயர்மட்ட பாலம் கட்டும் பணி: கலெக்டர் துவக்கி வைப்பு
உயர்மட்ட பாலம் கட்டும் பணி: கலெக்டர் துவக்கி வைப்பு
உயர்மட்ட பாலம் கட்டும் பணி: கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : பிப் 19, 2024 05:59 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த காமாட்சிபேட்டையில் மலட்டாற்றின் குறுக்கே 11.50 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த காமாட்சிபேட்டை சாலையில் மலட்டாற்றின் குறுக்கே 11.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய உயர் மட்ட பாலம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில், கலெக்டர் அருண்தம்புராஜ் அடிக்கல் நாட்டினார்.
நபார்டு திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை கிராம அலகின் சார்பில், 6 கண்கள் கொண்ட 22 மீட்டர் நீளம் வீதம் 9.95 மீட்டர் அகலத்தில் உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது.
இப்பாலத்தின் நீர்வழிப்பாதை 132 மீட்டர் ஆகும். இப்பாலம் அமைவதன் மூலம் 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை பண்ருட்டிக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும். ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், நபார்டு கிராம சாலை அலகின், உதவி கோட்ட பொறியாளர் சூரியமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

