/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உயர்கல்வி போட்டித்தேர்வு: பயிற்சி கலெக்டர் ஆய்வு
/
உயர்கல்வி போட்டித்தேர்வு: பயிற்சி கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 18, 2024 06:47 AM

கடலுார் ; காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு நடந்து வரும் உயர்கல்விக்கான போட்டித்தேர்வு பயிற்சியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், விருப்பமுள்ள மாணவர்களை நுழைவு தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்காக முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் இருந்து உயர்தொழில்நுட்ப ஆய்வக வசதி இருக்ககூடிய 87 மேல்நிலைப் பள்ளிகள், வட்டார அளவில் உயர்கல்வி வழிகாட்டி மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இம்மாணவர்களின் உயர்கல்வி விருப்பத்திற்கேட்ப உரிய பயிற்சி வழங்கவும் அவ்விருப்பத்தினை பள்ளி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் தெரிவித்ததாவது:
மாணவர்களுக்கு வட்டார உயர்கல்வி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் பிளஸ்2 பொதுத்தேர்வு நடைபெறும் வரை உயர்கல்வி சேர்க்கைக்கான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லுாரி, பொதுச்சட்ட நுழைவுத் தேர்வு போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்காக தங்களை தயார்படுத்திக்கொள்ள இன்றைய பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
மாணவர்கள் தங்களது உயர்கல்வி இலக்கினை அடைவதற்கு வழிகாட்டிடும் வகையில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.எள்ளப்பன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.