/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெடுஞ்சாலைதுறை - போலீசார் அலட்சியம் வண்டிகேட்டில் விபத்துகள் அதிகரிப்பு
/
நெடுஞ்சாலைதுறை - போலீசார் அலட்சியம் வண்டிகேட்டில் விபத்துகள் அதிகரிப்பு
நெடுஞ்சாலைதுறை - போலீசார் அலட்சியம் வண்டிகேட்டில் விபத்துகள் அதிகரிப்பு
நெடுஞ்சாலைதுறை - போலீசார் அலட்சியம் வண்டிகேட்டில் விபத்துகள் அதிகரிப்பு
ADDED : மே 26, 2025 03:16 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில் நெடுஞச்சாலை துறை மற்றும் போலீசாரின் அலட்சியத்தால் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது.
சிதம்பரத்தில் இருந்து கடலுார் செல்லும் வழியில், முக்கிய சந்திப்பாக உள்ள பகுதி வண்டிகேட் ஆகும்.
புவனகிரி, கடலுார், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்கள் சந்திக்கும் மும்முனை சந்திப்பாக உள்ளது.
வண்டிகேட் பகுதியில் போதிய அளவில் மின் விளக்குகள் இல்லாதது, சிக்னல் அமைக்காதது உள்ளிட்ட காரணங்களால் இரவு நேரங்களில் சாலையில் நடுவில், சென்டர் மீடியன் சிறிய உயரத்தில் இருப்பது தெரியாததால், கட்டை மீது பஸ் மற்றும் லாரிகள் மோதி தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகிறது. கடந்த 6 மாதங்களில் 8க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது.
விபத்தை கட்டுப்படுத்த நெடுஞ்சாலை துறையினரோ, சிதம்பரம் போலீசாரோ நடவடிக்கை எடுக்காததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த அரசு பஸ், வண்டிகேட் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் முன்பகுதி சேதமானது. 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன், சிக்னல் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.