/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொடி கம்பங்களை அகற்ற அறிவிப்பு ; நெடுஞ்சாலைத் துறை அதிரடி
/
கொடி கம்பங்களை அகற்ற அறிவிப்பு ; நெடுஞ்சாலைத் துறை அதிரடி
கொடி கம்பங்களை அகற்ற அறிவிப்பு ; நெடுஞ்சாலைத் துறை அதிரடி
கொடி கம்பங்களை அகற்ற அறிவிப்பு ; நெடுஞ்சாலைத் துறை அதிரடி
UPDATED : ஏப் 09, 2025 08:20 AM
ADDED : ஏப் 09, 2025 07:11 AM

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு இம்மாதத்துடன் முடிவடைகிறது.
இந்நிலையில், நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி மற்றும் ஜாதி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கொடி கம்பங்களை அவர்களாகவே அகற்றிக்கொள்ள கெடு விதித்து கொடி கம்பத்திலேயே அறிவிப்பு பலகையை நெடுஞ்சாலைத்துறை வைத்துள்ளது.
சிதம்பரம் சி.முட்லுாரில், நான்கு வழிச்சாலை ஓரத்தில் உள்ள தி.மு.க., கொடி கம்பத்தில், கட்டப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், 'தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பினர் (ஜாதி, மதம், சங்கம்) தாங்களே முன்வந்து தங்கள் கட்சி, அமைப்பு, இதர கொடி கம்பங்களை 15 நாட்களுக்குள் நிரந்தமாக அகற்றிக் கொள்ள வேண்டும்.
தவறினால். காவல் துறை துணையோடு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிரந்தரமாக அகற்றப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

