ADDED : ஜூன் 02, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; Bஅனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி, இந்திரா காந்தி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர். பண்ருட்டி, லிங்க் ரோடு போலீஸ் லைன் 5வது தெருவில் புதிய பள்ளிவாசல் ஏற்படுத்த தடையின்மை சான்று வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உள்ளிட்ட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.